News October 15, 2025
BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Similar News
News October 16, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பின்படி, தீபாவளி நாளில் காலை 6–7 மணி மற்றும் இரவு 7–8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி. அதிக ஒலி மற்றும் தொடர்ச்சியான சரவெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கரூர்: VOTER ID ல இத மாத்தனுமா??

கரூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும், 15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 16, 2025
கரூர்: இருசக்கர வாகனம் மோதியதில் கவலைக்கிடம்!

கரூர் வள்ளுவர் ஓட்டல் அருகே மணியம்மாள் (60) என்பவர் சாலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் ஷாஜகான் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், மணியம்மாள் என்பவர் மீது மோதியதில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் நேற்று ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.