News October 15, 2025

முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்: இபிஎஸ்

image

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பாக CM மற்றும் ஏடிஜிபி அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக CM கூறுவதாகவும் ஆனால் ஏடிஜிபியோ 500 போலீசார் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். TVK கேட்ட இடத்தை அளித்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

இவர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை

image

மருத்துவ பணியாளர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை என அரசு தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் துணை சுகாதார நிலையங்கள் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு காயங்களுக்கும் உடனே சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 16, 2025

50-வது வயதில் 2-வது திருமணம் செய்யும் பாடகர்

image

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ரகு தீட்சித், தன் 50-வது வயதில் 2-வது திருமணம் செய்யப் போகிறார். விவாகரத்தான இவர், பாடகியும் புல்லாங்குழல் கலைஞருமான வரிஜாஸ்ரீயை(34) மணமுடிக்க உள்ளார். தமிழில் வல்லவனுக்கு வல்லவன் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் இவர், இமைக்கா நொடிகள் படத்தில் பாடிய ‘நீயும் நானும் அன்பே’ பாடல் மிகவும் பிரபலம்.

News October 16, 2025

BREAKING: தீபாவளி போனஸ்.. அறிவித்தது தமிழக அரசு

image

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது. 24,816 பணியாளர்களுக்கு ₹40.62 கோடியில் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்திருந்தது.

error: Content is protected !!