News October 15, 2025
விழுப்புரம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 16, 2025
விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் <
News October 16, 2025
வேலூர்: குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரை விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News October 16, 2025
விழுப்புரம் எம்.பி வைத்த கோரிக்கை!

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த குரல் கொடுப்பதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.