News October 15, 2025

விசாவுக்கான ஆங்கில தேர்வை கடுமையாக்கும் பிரிட்டன்

image

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கான ஆங்கில மொழியறிவு தேர்வை கடினமாக்குவதற்கான மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கலாகியது. பிரிட்டனுக்கு வருவோர், அங்குள்ள 12-ம் வகுப்பிற்கு இணையான ஆங்கில மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அவ்வாறு இருந்தால் தான் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களால் பங்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

image

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதனிடையே வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 15, 2025

ஐநாவில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் இந்தியா

image

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 முதல் 2028 வரை, 3 ஆண்டுகளுக்கு இந்தியா பணியாற்றும். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது இந்தியா கொண்டுள்ள ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது என இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி.ஹரீஷ் பதிவிட்டுள்ளார். மேலும், இக்குழுவில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2025

காதலித்து ஏமாற்றினால் நரகத்தில் என்ன தண்டனை?

image

‘அந்நியன்’ படம் பார்த்தவர்களுக்கு கருட புராணம் பற்றி சொல்ல தேவையில்லை. அந்த கருடபுராணத்தின் படி காதல் மற்றும் திருமணத்தில் ஏமாற்றினால் என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது தெரியுமா? ‘அநித்தாமிஸ்ர நரகம்’. இதில், கடும் இருளில் சிக்கி, பார்வை மங்கி, மூர்ச்சையாகி தவிப்பார்களாம். தவறான உறவுகளில் ஈடுபட்டால் ‘வஜ்ர கண்டக நரகம்’. அதாவது கூர்மையான மரங்களில் அமரவைத்து கழுவேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!