News October 15, 2025
பசுமை பட்டாசுகளை விற்க அனுமதி

காற்று மாசுபாட்டால் மூச்சு முட்டும் டெல்லியில், 5 ஆண்டுகள் கழித்து தீபாவளிக்கு வெடி சத்தம் கேட்கவுள்ளது. வரும் தீபாவளிக்கு, டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க SC அனுமதியளித்துள்ளது. அதன்படி, அக்.18-ம் தேதி முதல் அக்.21-ம் தேதி வரை மாலை 6 – இரவு 10 மணி வரை வெடித்துக்கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் மட்டுமே பசுமை பட்டாசுகளை விற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
BREAKING: ரஜினியுடன் இரவில் திடீர் சந்திப்பு

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் OPS நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் இருந்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனவும் ரஜினிக்கு OPS தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அண்மையில் OPS வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

ஒரு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, அதில் மஞ்சள் பொடியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளுங்கள்.
நன்கு கலந்து சூடாக அப்படியே குடித்துப் பாருங்கள். உங்கள் ஒற்றைத் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
News October 16, 2025
₹12,400 கோடி சொத்து இருந்தும் இது தேவையா?

₹12,400 கோடி சொத்து இருந்தும் பான் மசாலா விளம்பரங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று, நடிகர் ஷாருக்கானுக்கு பிரபல யூடியூபர் துருவ் ரதீ கேள்வி எழுப்பியுள்ளார். பான் மசாலா விளம்பரத்திற்காக ஷாருக் ₹100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ₹12,400 கோடி சொத்து இருக்கும்போது, கூடுதலாக ₹100 கோடி தேவையா எனவும், உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா எனவும் யூடியூபர் துருவ் கேள்வி எழுப்பியுள்ளார்.