News October 15, 2025
63 ஏரிகளில் மீன் பிடிக்குத்தகை – ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் 63 ஏரிகளில் மீன் பிடிக்குத்தகை அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்பபுள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளன. ஏரியின் குத்தகை ஏலம் நாள் குறித்த விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை – கலெக்டர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி அருகே அமைந்திருக்கும் சிறுவங்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நாளை (அக்.17) மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி – காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: 1 ஆண்டு மருத்துவ படிப்பு – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை வருகிற 14.11.2025 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும், முதலில் வருபவர்களுக்கே சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.