News October 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 26-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
Similar News
News October 15, 2025
BREAKING: தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவித்தது

தீபாவளி பண்டிகையையொட்டி 2024 – 25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் இன்று(15.10.2025) அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க.
News October 15, 2025
TN ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு

தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆதவ் அர்ஜுனா பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். மேலும் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் முறைப்படி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
News October 15, 2025
செக்க செவேல்னு மருதாணி சிவக்க இதோ TIPS

பெண்களே, தீபாவளி நெருங்குது. கண்டிப்பா இந்த பண்டிகை காலத்துல கையில் மருதாணி வைப்பீங்க. அந்த மருதாணி செக்க செவேல்னு சிவக்க சில டிப்ஸ் இருக்கு. ➤கிராம்பை அரைத்து மருதாணியுடன் கலந்து பயன்படுத்துங்கள் ➤மருதாணி காய்ந்தவுடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவலாம். இப்படி செய்வதால், மருதாணி கூடுதலாக சிவக்கும். உங்கள் தெரிந்த பெண்களுக்கு SHARE பண்ணுங்க.