News April 16, 2024

திருச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மருங்காபுரி அடுத்த பளுவஞ்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26). இவர் இன்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 8, 2025

திருச்சி: ஆட்டோ மோதி பரிதாப பலி

image

பெருகமணி ரயில்வே ஸ்டேஷன் அருகே பெட்டவாய்த்தலை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற ஆட்டோ நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த கொடியாலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 7, 2025

திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக் <<>>செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

error: Content is protected !!