News October 15, 2025

திண்டுக்கல் காவல்துறையினர் வேலை வாய்ப்பு மோசடியில் 2- பேரை கைது செய்தனர்

image

திண்டுக்கல் கோபால்பட்டி சேர்ந்த மாமந்தி, புதுக்கோட்டையை சேர்ந்த கிருபாகரன் இருவரும் இணைந்து மதுரை,வாடிப்பட்டி, ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் நல பணியாளர் கிருபாகரன் என்பவர் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக தவணை முறையில் ஏழு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அவர்களின் உத்தரவின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மாமந்தி,கிருபாகரனை இன்று கைது செய்தனர்.

Similar News

News October 16, 2025

திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக (அக்டோபர் 16) இன்று “Loan App மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News October 16, 2025

திண்டுக்கல்: கொலை வழக்கில் தாய், மகன் கைது

image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, கூட்டாத்து அய்யம்பாளையத்தில், இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்த மருமகன் ராமச்சந்திரனை அவரது மாமனார் சந்திரன் அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலைக்கு எதிராக ராமச்சந்திரன் உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனை முற்றுகையிட்டனர். SP உத்தரவில் தீவிர விசாரணை நடத்தி சந்திரனின் மனைவி அன்புச்செல்வி மற்றும் அவரது மகன் ரிவீன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

News October 16, 2025

திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

error: Content is protected !!