News October 15, 2025
சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் பணம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை உரிய ஆவணங்களுடன் அணுகி, வருகின்ற 28,11,2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
சிவகங்கை: G.H.ல் கேண்டீன் வைக்க விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். சுய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் 22ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
சிவகங்கை: விவசாயியை தாக்கி கொலை செய்தவர் கைது

சிவகங்கை அருகே செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவர். நேற்று முன்தினம் இவரை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த பிரபுகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து கூட்டுறவுபட்டி விலக்கு அருகே வைத்து தாக்கியதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்து பிரபுகுமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.