News October 15, 2025
ரூ.19 கோடியில் திருச்செந்தூர் கடல் அரிப்பு தடுப்பு பணிகள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விரதம் வரும் அக். 22 தொடங்கி அக். 27 அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். இதனைக் காண திருச்செந்தூருக்கு பக்தர்கள் திரளானோர் வருவார்கள். இந்நிலையில், அங்கு கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.19 கோடி செலவிடப்பட்டு சுவர்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அக். 22க்குள் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுளள்னர்.
Similar News
News October 16, 2025
சாத்தான்குளம் அருகே தாயை வெட்டிய மகன்

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருக்கும், இவரது தாயார் சுதா செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் தனது தாய் சுதா செல்வியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
News October 16, 2025
BREAKING தூத்துக்குடிக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
BREAKING: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விளாத்திகுளம், கயத்தாறு, தூத்துக்குடி நகர் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இலம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.