News October 15, 2025

திருவாரூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

திருவாரூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 15, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.15) இரவு முதல் நாளை (அக்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 15, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 15, 2025

திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

image

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!