News October 15, 2025
தேர்வு கிடையாது.. மத்திய அரசில் வேலை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) 1,101 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஃபிட்டர் முதல் நர்சிங் வரை பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ITI (அ) டிகிரி. உதவித்தொகை: ₹10,019/ ₹12,524. தேர்வு முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.21. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 15, 2025
கொலை வழக்கில் பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை

கோவையில் இளைஞர் கொலை வழக்கில் பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 -ல் விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பான மோதலில் நாகராஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் கந்தசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன், ₹10,000 அபராதமும் விதித்துள்ளது.
News October 15, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.. ராஜினாமா செய்தார்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், 5 மண்டல தலைவர்களை உடனடியாக ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்திராணியின் ராஜினாமா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 15, 2025
இந்தியா வந்தவருக்கு நேர்ந்த சோகம்… PM மோடி இரங்கல்

முன்னாள் கென்ய பிரதமர் ரைலா ஒடிங்கா காலமானார். கேரளாவில் உள்ள ஆயுர்வேத கண் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரைலா ஒடிங்கா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, அவரை இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.