News October 15, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹94,880-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹11,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1,960, இன்று ₹280 என 2 நாள்களில் ₹2240 உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி & GST வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Similar News
News October 15, 2025
சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.
News October 15, 2025
செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

தீபாவளியை முன்னிட்டு ₹1 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள் ஒன்றுக்கு 100 SMS-ம் அனுப்பலாம். அக்.15 முதல் நவ.15 வரை இலவசமாக சிம்கார்டை வாங்கி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என BSNL தெரிவித்துள்ளது.
News October 15, 2025
BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.