News October 15, 2025
கோவை வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News October 16, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கோவையில் பரபரப்பு: குப்பை தொட்டியில் குழந்தை சடலம்!

கோவை அம்மன் குளம் சாலையில் உள்ள பொதுக்கழிப்பறை அருகே, குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை நேற்று மாலை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்ய வந்தபோது, பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.
News October 16, 2025
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள ஏ.கே.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன்(22). இரும்புக்கடை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது டூவீலரில் ஊட்டி சாலை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, முன்னால் சென்ற பிக்கப் வாகனத்தை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.