News October 15, 2025
கொலை முயற்சி வழக்கு ரவுடிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை

வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்(49) என்பவரை போரூரை சேர்ந்த ரவுடி அஸ்வந்த்(30) கடந்த 2022ம் ஆண்டு தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அஸ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அஸ்வந்த் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News October 16, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
திருவள்ளூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

திருவள்ளூர் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.
News October 16, 2025
திருவள்ளூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

திருவள்ளூர் மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.