News October 15, 2025

அறிவாலயத்தின் அரசியல் பிராப்பர்ட்டியா கமல்ஹாசன்?

image

அரசியலில் பெரிய அனுபவம் இல்லை என்றாலும், கூர்மையான அறிவாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். அவரை திமுக பயன்படுத்துகிறது என சொல்வது கொச்சைப்படுத்தும் செயல் என ஆ.ராசா பதிலளித்துள்ளார். தற்போதைய அவரது நடவடிக்கைகளை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் திமுக இருக்கிறதென சிலர் சொல்கிறார்கள். இது தவறு என கூறிய அவர், நடிகராக இருந்தபோது கொண்டிருந்த கொள்கைகளை பொதுவாழ்க்கைக்கு வந்தபின் மாற்றியிருப்பார் என கூறியுள்ளார்.

Similar News

News October 15, 2025

Foxconn முதலீடு சர்ச்சை: என்னதான் நடக்கிறது?

image

Foxconn நிறுவனம் TN-ல் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக CM தெரிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn கூறியது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விளக்கமளித்த அமைச்சர் TRB ராஜா, இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றும், இது உறுதியான முதலீடு எனவும் தெரிவித்தார்.

News October 15, 2025

தீபாவளிக்கு ருசிக்க வேண்டிய பலகாரங்கள்..

image

தீபாவளி பண்டிகைக்கு, நம் வீட்டில் தாய்மார்கள் கண்டிப்பாக முறுக்கு, சீடை, குலாப் ஜாமுன், மிக்சர் போன்ற பலகாரங்கள் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாரம்பரிய பலகாரங்கள் உள்ள நிலையில், ஏன் ஒரு சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும். ஆகையால் இந்த தீபாவளிக்கு, மேற்கண்ட பலகாரங்களை செய்து கொடுக்குமாறு அம்மாவிடம் கேளுங்க..

News October 15, 2025

கவர்னருக்கு எதிராக SCல் தமிழக அரசு மனு

image

தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை ஒப்புதலுக்காக தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், மசோதா மீது முடிவெடுக்காமல் அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.

error: Content is protected !!