News October 15, 2025

தேனி: சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பரிதாப பலி

image

சின்னமனுாரை சேர்ந்தவர் தக்ஷனாஸ்ரீ (16). இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவர் போலிக் ஆசிட் சத்து மாத்திரைகளை விளையாட்டாக சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு தீராத வயிற்று போக்கு ஏற்பட்டது. அக்.12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல்நிலை பாதிப்புடன் சத்துமாத்திரை சாப்பிட்டதால் மூளைப்பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக டாக்டர் தெரிவித்தனர்.

Similar News

News October 15, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 15.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 15, 2025

தேனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு

image

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் உள்ள சகோதரரின் தோட்டத்தை வீட்டில் தங்கி இருந்து தோட்டத்தை கவனித்து வந்துள்ளார். நேற்று (அக்.14) காலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிவி திருடப்பட்டு தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 15, 2025

தேனி அருகே பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி

image

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 22.10.2025 தேதி முதல் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 22.10.2025 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!