News October 15, 2025

BREAKING: இரவில் விஜய் எடுத்த அதிரடி

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து ஆறுதல் கூறி, நேரில் நிதியுதவி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பதற்கான இடத்தை தர, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், இடத்தை தேர்வு செய்தபின், தீபாவளிக்கு பிறகே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 15, 2025

TN ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு

image

தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆதவ் அர்ஜுனா பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். மேலும் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் முறைப்படி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

News October 15, 2025

செக்க செவேல்னு மருதாணி சிவக்க இதோ TIPS

image

பெண்களே, தீபாவளி நெருங்குது. கண்டிப்பா இந்த பண்டிகை காலத்துல கையில் மருதாணி வைப்பீங்க. அந்த மருதாணி செக்க செவேல்னு சிவக்க சில டிப்ஸ் இருக்கு. ➤கிராம்பை அரைத்து மருதாணியுடன் கலந்து பயன்படுத்துங்கள் ➤மருதாணி காய்ந்தவுடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவலாம். இப்படி செய்வதால், மருதாணி கூடுதலாக சிவக்கும். உங்கள் தெரிந்த பெண்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 15, 2025

₹2,000 உதவித்தொகை.. வந்தது முக்கிய அப்டேட்!

image

PM Kisan திட்டத்தில் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் தான் உதவித்தொகை பெற முடியும் என்ற விதிக்கு மாறாக, 31 லட்சம் பேர் முறைகேடாக பணம் பெற்று வருவதாகவும், அவர்களை நீக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 21-வது தவணைக்கான ₹2,000 தீபாவளிக்கு முன்பாகவே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!