News October 15, 2025
VIRAL: ராமர் கோயிலின் முதல் தள புகைப்படங்கள்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்த கோயிலின் முதல் தளத்தின் புகைப்படங்கள் முதல்முதலில் வெளிவந்துள்ளன. இங்கு 5 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வீக அனுபவத்தையும், கட்டிடக்கலை மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது. மேலே Swipe செய்து அதை பாருங்கள்.
Similar News
News October 15, 2025
கரூர் துயரத்திலும் திமுக அரசியல் செய்கிறது: EPS

கரூர் துயரத்தையொட்டி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதனை பார்த்த சபாநாயகர் என்ன ரத்த கொதிப்பா என கேட்டதற்கு, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம் என பதிலடியும் கொடுத்துள்ளார். துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News October 15, 2025
13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

TN-ல் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். தற்போது, தேனி, புதுக்கோட்டை, நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
News October 15, 2025
UPI: இந்தியாவில் எது டாப் தெரியுமா?

தற்காலத்தில் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கம் மறைந்துவருகிறது. எல்லாவற்றுக்கும் UPI மூலம் பணம் செலுத்துகிறோம். இந்தியாவில் செப்டம்பர் 2025 நிலவரப்படி, 19.63 பில்லியனுக்கும் அதிகமான டிரான்சாக்ஷன் நடந்துள்ளன. இதில் PhonePe 48.38% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. GPay 35.08%, Paytm 5.83% அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்ற நிறுவனங்கள் – 10.71%. ஆகவுள்ளது. நீங்கள் எந்த UPI யூஸ் பண்றீங்க?