News October 15, 2025
தீபாவளி.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

இன்னும் 5 நாள்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் & தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஹாஸ்பிடல்ஸ், வழிபாட்டு தலங்கள் & அமைதியாக இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் <<18005190>>நேரத்தையும்<<>> அரசு அறிவித்துள்ளது.
Similar News
News October 15, 2025
தீபாவளிக்கு ருசிக்க வேண்டிய பலகாரங்கள்..

தீபாவளி பண்டிகைக்கு, நம் வீட்டில் தாய்மார்கள் கண்டிப்பாக முறுக்கு, சீடை, குலாப் ஜாமுன், மிக்சர் போன்ற பலகாரங்கள் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாரம்பரிய பலகாரங்கள் உள்ள நிலையில், ஏன் ஒரு சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும். ஆகையால் இந்த தீபாவளிக்கு, மேற்கண்ட பலகாரங்களை செய்து கொடுக்குமாறு அம்மாவிடம் கேளுங்க..
News October 15, 2025
கவர்னருக்கு எதிராக SCல் தமிழக அரசு மனு

தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை ஒப்புதலுக்காக தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், மசோதா மீது முடிவெடுக்காமல் அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.
News October 15, 2025
‘இட்லி கடை’ படம் மனதிற்கு நெருக்கமானது: அண்ணாமலை

இளைஞர்களின் வாழ்க்கையில், மனதிற்கும், பணத்திற்கும் இடையேயான ஒரு போராட்டம் குறித்து தனுஷ், ‘இட்லி கடை’ படத்தில் தைரியமாக உடைத்து பேசியுள்ளதாக அண்ணாமலை பாராட்டியுள்ளார். ரிஷப் ஷெட்டியை போல எழுத்து, இயக்கம், நடிப்பு என 3 துறைகளிலும் சிறப்பான படைப்பை கொடுத்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளார். இப்படத்தில் கிராம தெய்வங்களும், வழிபாடுகளும் மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.