News October 15, 2025

MGR-க்கு பிறகு EPS இணக்கமாக உள்ளார்: நயினார் நாகேந்திரன்

image

மாநில அரசு நல்ல முறையில் செயல்பட மத்திய அரசின் துணை இருக்க வேண்டும் என்று நயினார் கூறியுள்ளார். இதை MGR நன்கு உணர்ந்திருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது EPS-ம் அதை உணர்ந்திருப்பதாக தெரிவித்தார். 4 ஆண்டுகள் மத்திய அரசுடன் EPS இணக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதாகவும், விலைவாசி விண்ணை முட்டுவதாகவும் விமர்சித்தார்.

Similar News

News October 15, 2025

இந்த தீபாவளிக்கு இத பத்தியும் யோசிங்க!

image

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அதை மதிக்காதவர்களே இங்கு அதிகம். 2024-ல் இந்தியாவில் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கொடியதாக இருக்கும் காற்று மாசுபாட்டை குறைக்கவே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த தீபாவளிக்காவது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். SHARE.

News October 15, 2025

பிரபல நடிகர் காலமானார்

image

பாலிவுட்டின் பிரபல நடிகர் ‘ராமாயண புகழ்’ பங்கஜ் தீர் (68) காலமானார். கேன்சரால் பாதிக்கப்பட்டு போராடிவந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்துள்ளது. தூர்தர்ஷன் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘மகாபாரத்’ டிவி சீரியலில், கர்ணன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தீரஜ். பல பாலிவுட் படங்களிலும், சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகமும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 15, 2025

செருப்பு மட்டுமல்ல, பாட்டிலும் வீசப்பட்டது: அமைச்சர்

image

கரூர் தவெக கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக கூறப்படுவது குறித்து நயினார் நாகேந்திரன் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், செருப்பு வீச்சை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கீழே விழுந்த ஒருவருக்கு உதவுவதற்காகவே செருப்பு வீசப்பட்டதாக கூறினார். அத்துடன் பாட்டில், தேங்காயும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!