News October 15, 2025

மானாமதுரையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்

image

மானாமதுரை நகர் புதிய பேருந்து நிலையம் -ஆனந்த புரம் இரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற அக்டோபர் 17 நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து அரசியல் கட்சிகள் வர்த்தக தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைக்கின்றனர்.

Similar News

News October 15, 2025

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை

image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நேற்று காலையிலிருந்து பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதில் சிவகங்கை 26.60 மில்லி மீட்டர், காரைக்குடி 50.00மில்லி மீட்டர், காளையார் கோவில் 34.50 மில்லி மீட்டர் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மலை விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் தகவல்.

News October 15, 2025

காரைக்குடி வந்தார் தமிழக ஆளுநர்

image

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா. இரவி ஆகியோர் உடனிருந்தனர்

News October 15, 2025

சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!