News October 15, 2025

செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையின் போது அவசர தேவைக்கு ஏற்ப 108 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் (ம) ஓட்டுநர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடவும். அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களில் தீயணைக்க பயன்படும் கருவிகள், மீட்பு உபகரணங்கள், அவசர மருந்து பொருட்கள் போதிய அளவில் வைத்திருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு ரயில்கள்!

image

தீபாவளி விடுமுறையை ஒட்டி வருகின்ற 22-ம் தேதி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News October 15, 2025

தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்!

image

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வரும் அக்.16 மற்றும் 18-ந்தேதி இரவு 11.30 மணிக்கு (வண்டி எண்-06133) 14 முன்பதிவு இல்லா பெட்டிகள் மற்றும் 6 முன்பதிவு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கமாக அக்.17-ந்தேதி மாலை 4.35 மணிக்கு (வண்டி எண்-06134) கன்னியாகுமரி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.

News October 15, 2025

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கூடுவாஞ்சேரி இடையே வரும் அக்டோபர் 17-ந்தேதி சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இரவு 7:45, 7:58 மற்றும் 8:10 ஆகிய நேரங்களில் ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!