News October 15, 2025

புதுச்சேரி: தொழிற்சாலை ஊழியர் லாரி மோதி பலி

image

புதுச்சேரி, வில்லியனூர் அடுத்துள்ள பத்துகண்ணு பகுதியில் செங்கல் ஏற்றி வந்த மினி லாரி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ராஜா (35) என்பவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி, ராஜாவும் அவருடன் பயணித்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இச்செய்தி அறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News

News October 15, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே <<>>CLICK செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 15, 2025

புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அம் லுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2025

புதுவை: மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் தற்கொலை

image

அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் டிரைவர் சிவபாண்டியன் (52). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவர் வானூர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிவபாண்டியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!