News October 15, 2025

‘லவ் டுடே 2’ அப்டேட் கொடுத்த பிரதீப்

image

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைக்கு நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், வருங்காலத்தில் ‘லவ் டுடே 2’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். வரும் 17-ம் தேதி அவர் நடித்த ‘டியூட்’ ரிலீசாகும் நிலையில், டிச.18-ல் ‘LIK’ ரிலீசாகிறது.

Similar News

News October 15, 2025

நவம்பர் மாத ரேஷன் அரிசியை இம்மாதமே வாங்கலாம்

image

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை மட்டும் இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கெனவே பெற்றவர்களும் ரேஷன் கடைகளில் இம்மாதமே அடுத்த மாதத்திற்கான அரிசியை பெற்று கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை காலத்தில், மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT.

News October 15, 2025

கரூர் துயருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை: நயினார்

image

கரூர் துயரத்தில், அரசின் மீது எந்த தவறுமே இல்லை என்பது போல் சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியுள்ளதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். விஜய் மீது செருப்பு வீசப்பட்டது, ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது, காவல்துறை தடியடி நடத்தியது உள்ளிட்டவைக்கு CM சரியான விளக்கம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் 41 உயிர்கள் போயிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

image

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.

error: Content is protected !!