News October 15, 2025
தனியார் பள்ளிகளுக்கு 31-ம் தேதி வரை கெடு

கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க, தனியார் பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.
Similar News
News October 15, 2025
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு

ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF, இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இருந்து 0.2% அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.
News October 15, 2025
கரூரில் பாதுகாப்பு குறைபாடா? CM பேரவையில் விளக்கம்

கரூர் துயரத்துக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என சட்டப்பேரவையில் EPS குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய, ஸ்டாலின் விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியதாக கூறியுள்ளார். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று EPS சொல்லவது எப்படி சரியாக இருக்கும் என CM கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 15, 2025
தொடர்ந்து சரியும் IPL-ன் மவுசு!

பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL-ன் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது. 2023-ல் ₹93,500 கோடியாக இருந்த IPL-ன் மதிப்பு, 2024 சீசனில் ₹82,700-ஆகவும், 2025-ல் மேலும் ₹6,600 கோடி குறைந்து, தற்போது ₹76,100 கோடியாகவும் உள்ளது. ஆன்லைன் மணி கேம்கள் தடை செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு மீடியா உரிமை அளிக்கப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். உங்களுக்கும் IPL ஆர்வம் குறைந்துவிட்டதா?