News October 15, 2025
இந்திய வங்கிகள் வெட்கப்பட வேண்டும்: மல்லையா

தனது சொத்துக்களை விற்று ₹14,100 கோடி மீட்டுள்ளதாக நிதியமைச்சகமே அறிவித்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால், அது குறித்த வெளிப்படையான அறிக்கையை இன்னும் இந்திய வங்கிகள் வெளியிடவில்லை எனவும், இதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். வங்கிகளில் வாங்கிய கடனை விடவும் அதிகம் வசூலித்துவிட்டதாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் அவர், தற்போது லண்டனில் இருக்கிறார்.
Similar News
News October 15, 2025
போன் தொலைந்து போச்சா? இனி ஈஸியா மீட்கலாம்!

✦தொலைந்து போன போனை கண்டுபிடிக்க மத்திய அரசின் Sanchar Saathi தளத்திற்கு செல்லவும் ✦அதில், ‘Citizen Centric Services’-ஐ கிளிக் செய்யவும் ✦இதில், Block your lost/stolen mobile handset-ஐ தேர்ந்தெடுத்து, மீண்டும் Block your lost/stolen mobile handset-ஐ கிளிக் செய்து, கேட்கப்படும் தகவல்களை கொடுக்கவும் ✦போன் பிளாக் செய்யப்பட்டு, IMEI மூலம் தேடும் பணி தொடங்கிவிடும். இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News October 15, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு TVK சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். 41 பேரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தால் கட்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோடு, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த நிலையில், இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.
News October 15, 2025
உலகின் மகிழ்ச்சியான நகரம் இதுதான்!

Time Out Index வெளியிட்ட 2025-ன் உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் அரபு நாடான UAE-இன் தலைநகர் அபுதாபி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. நல்ல வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, பல கலாசார மக்கள் வாழ்வது ஆகிய காரணங்களால் அந்நகர மக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த பட்டியலில் உள்ள டாப்-5 நகரங்களில் இந்திய நகரம் ஒன்றும் உள்ளது. அதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் பண்ணி பாருங்க.