News October 15, 2025
அக்டோபர் 15: வரலாற்றில் இன்று

*உலக கைகழுவும் நாள். *1764 – மருதநாயகம், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள். *1878 – மின்விளக்கு தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தை எடிசன் ஆரம்பித்தார். *1931 – முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பிறந்தநாள். *1932 – டாட்டா ஏர்லைன்ஸ் தனது முதலாவது விமான சேவையை தொடங்கியது. இது பின்னர் ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
Similar News
News October 15, 2025
Foxconn முதலீடு சர்ச்சை: என்னதான் நடக்கிறது?

Foxconn நிறுவனம் TN-ல் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக CM தெரிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn கூறியது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விளக்கமளித்த அமைச்சர் TRB ராஜா, இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றும், இது உறுதியான முதலீடு எனவும் தெரிவித்தார்.
News October 15, 2025
தீபாவளிக்கு ருசிக்க வேண்டிய பலகாரங்கள்..

தீபாவளி பண்டிகைக்கு, நம் வீட்டில் தாய்மார்கள் கண்டிப்பாக முறுக்கு, சீடை, குலாப் ஜாமுன், மிக்சர் போன்ற பலகாரங்கள் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாரம்பரிய பலகாரங்கள் உள்ள நிலையில், ஏன் ஒரு சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும். ஆகையால் இந்த தீபாவளிக்கு, மேற்கண்ட பலகாரங்களை செய்து கொடுக்குமாறு அம்மாவிடம் கேளுங்க..
News October 15, 2025
கவர்னருக்கு எதிராக SCல் தமிழக அரசு மனு

தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை ஒப்புதலுக்காக தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், மசோதா மீது முடிவெடுக்காமல் அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.