News October 15, 2025
தலைக்கு ₹7 கோடி: பயங்கர மாவோயிஸ்ட் சரண்

தலைக்கு ₹7 கோடிக்கும் மேல் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மல்லஜொலு வேணுகோபால் ராவ், தனது 60 போராளிகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா CM பட்னவிஸ் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மாவோயிஸ்ட்டான வேணுகோபால், 76 CRPF ஜவான்கள் கொல்லப்பட்ட 2010 தண்டேவாடா தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
Similar News
News October 15, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு TVK சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். 41 பேரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தால் கட்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோடு, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த நிலையில், இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.
News October 15, 2025
உலகின் மகிழ்ச்சியான நகரம் இதுதான்!

Time Out Index வெளியிட்ட 2025-ன் உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் அரபு நாடான UAE-இன் தலைநகர் அபுதாபி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. நல்ல வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, பல கலாசார மக்கள் வாழ்வது ஆகிய காரணங்களால் அந்நகர மக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த பட்டியலில் உள்ள டாப்-5 நகரங்களில் இந்திய நகரம் ஒன்றும் உள்ளது. அதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் பண்ணி பாருங்க.
News October 15, 2025
இந்த தீபாவளிக்கு இத பத்தியும் யோசிங்க!

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அதை மதிக்காதவர்களே இங்கு அதிகம். 2024-ல் இந்தியாவில் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கொடியதாக இருக்கும் காற்று மாசுபாட்டை குறைக்கவே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த தீபாவளிக்காவது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். SHARE.