News October 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 15, புரட்டாசி 29 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், கரிநாள். ▶வழிபாடு: நவ கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு பச்சைப்பயறு நைவேத்யம் செய்து வழிபடுதல்.

Similar News

News October 15, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹94,880-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹11,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1,960, இன்று ₹280 என 2 நாள்களில் ₹2240 உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி & GST வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News October 15, 2025

கருப்பு பட்டையுடன் வந்த அதிமுக MLA-க்கள்

image

அதிமுக MLA-க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப் பேரவைக்கு வந்துள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக அவர்கள் இவ்வாறு வந்துள்ளனர். மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசியல் கூட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாம்.

News October 15, 2025

காங்.,க்கு எதிராக உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

image

கரூருக்கு வந்த உதயநிதி, உடனடியாக துபாய்க்கு சென்றது ஏன் என திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். காங்., மூத்த நிர்வாகியின் இந்த பேச்சுக்கு, ‘ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, நாவை அடக்கி பேசு’ என உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, ‘திமுக, காங்., ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது’ என வேலுசாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.

error: Content is protected !!