News October 15, 2025
தீபாவளி ஸ்பெஷல்: நாய்களுக்கென தனி வழிபாடு

நேபாளில் Tihar என்ற பெயரில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகையின் 2-வது நாளில் நாய்கள் வழிபாடு நடத்தப்படுகிறது. மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய்களிடம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு வழிபாடு நடத்தப்படுகின்றன. மேலும், இந்த நாளில் நாய்களுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன.
Similar News
News October 15, 2025
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க ஸ்டாலின்: அதிமுக

Foxconn நிறுவனம், CM ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ₹15,000 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், இதை Foxconn மறுத்துள்ளது. இதை சுட்டிக்காட்டிய அதிமுக, “பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க” என்ற ஸ்டாலின் பயன்படுத்திய பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் என்று கடுமையாக சாடியுள்ளது.
News October 15, 2025
கரூர் துயரம்: ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்து வருகிறார். உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளதாகவும் CM தெரிவித்தார். கரூர் விவகாரம் குறித்து விவாதிக்க EPS கோரிக்கை வைத்த நிலையில், ஸ்டாலின் பேசி வருகிறார்.
News October 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது.. செக் பண்ணுங்க

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 26-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மொத்தம் 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளன. அவர்களுக்கு விரைவில் ₹1,000 வழங்கப்படும் எனவும் தெரிகிறது.