News October 15, 2025
கரூர் மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மூன்று மாத கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்குகிறது. விருப்பமுள்ளோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 22.10.2025-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
Similar News
News October 15, 2025
கரூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

கரூர் மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி மண்மங்கலம், கரூர், குளித்தலை, புகலூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த 17 வட்டாட்சியர்கள் பணியிடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று வெளியிட்டுள்ளார்.
News October 15, 2025
கரூர்: POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.
News October 15, 2025
கரூரில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!