News October 15, 2025

3.15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை : மாநகராட்சி

image

சென்னையில், முறையாக சொத்து வரி செலுத்தாமல், 3.15 லட்சம் பேர் ஏமாற்றி வருவதாக, மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, நிலுவையில் உள்ள 300 கோடி ரூபாய் வரியை வசூலிக்கும் வகையில், மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி, உத்தரவு போட்டுள்ளதாக மாநகராட்சி வருவாய் அலுவலர் கே.மகேஷ் தெரிவித்தார்.

Similar News

News October 15, 2025

சென்னை: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, சென்னை பெருநகர காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க. உஷாரா இருங்க

News October 15, 2025

சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு பறந்த உத்தரவு

image

கொடுங்கையூரில் உள்ள பிரபல ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட நாகராஜன் மற்றும் ராதிகா ஆகியோர் வாந்தி, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக உறுதி செய்ததையடுத்து, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகராஜனுக்கு ₹25,000, ராதிகாவுக்கு ₹50,000 என மொத்தம் ₹75,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

News October 15, 2025

சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். மேலும் தகவலுக்கு 94999 33644 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள் அல்லது பிறப்பு பதிவாளர், சுகாதார ஆய்வாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தால் போதும். இந்த செய்தியை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!