News October 15, 2025

புதுச்சேரி: கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை

image

புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (48) எலெக்ட்ரீசியன் அவர் மனைவி விஜயகுமாரி (42), இருவரிடையே மனக்கசப்பு இருந்துள்ளது. விஜயகுமாரி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசியுள்ளார். இதை கணவர் ராஜேஷ், கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயகுமாரி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 15, 2025

புதுச்சேரி: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், முத்தியால் பேட்டை தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூடத்தில் தொகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் துவங்குவது, முக்கிய வீதிகளில் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர்.

News October 15, 2025

புதுவை: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

புதுவை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில் புகாரளிக்கலாம்<<>>. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

புதுவை: அரசு ஊழியர் மீது தாக்குதல்

image

உருளையன்பேட்டை, சுப்பையா நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். அரசு அச்சகத்துறையில் பணியாற்றி வரும் இளங்கோவன், ரூ.11 லட்சம் கடனாக தனது மூத்த அண்ணன்களான ரமேஷுக்கும், ஸ்ரீதருக்கும் கொடுத்துள்ளார். அந்த பணத்தை இளங்கோவன் மீண்டும் கேட்டபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இளங்கோவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!