News October 15, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தென்கீரனூரைச் சேர்ந்த தேன்மொழி, இன்று மற்றொரு வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த இரும்புப் பீரோவை உடைத்து, மர்ம நபர்கள் 11 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு உதவித்தொகை!

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து அனைத்து வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News October 15, 2025
கள்ளக்குறிச்சி: +2 போதும், நல்ல வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
கள்ளக்குறிச்சி: வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை!

மரவனந்தத்தை சேர்ந்த முருகனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த 1 வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தாங்க முடியாமல் கடந்த 11-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.