News October 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ்அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி உடைய தமிழி அறிஞர்கள் www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகிற 17.11.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் நிலையம் அமைத்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் நேரடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
தஞ்சாவூர்: ஆசிரியரிடம் தங்க நகை வழிப்பறி

பாபநாசம் அருகே மாத்தூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை கோமதி(44). இவர் பணி முடிந்து மொபெட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் சென்றபோது, தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதில் கீழே விழுந்த கோமதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.