News October 15, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக, வரும் 16, 17, 18, 22 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களை தவிர்த்து, காரைக்குடி திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்.17ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2413510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <