News October 15, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News October 15, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<
News October 15, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுதியுள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் அவரச உதவி தேவைப்படும் மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையை ‘1077’, ‘04142-20700’ ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
கடலூர்: சரவெடிகளை வெடிக்க கூடாது-ஆட்சியர் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகை நாளில் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்