News October 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News October 15, 2025
காலத்தை வென்ற விண்வெளி நாயகனுக்கு இன்று பிறந்தநாள்!

இந்திய ஏவுகணைகளின் தந்தை என கொண்டாடப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. தேசத்தின் சிறந்த மூளைகளை வகுப்பறையின் கடைசி பெஞ்ச்சில் காணலாம் என கூறியவர், நாட்டின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்தார். ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று செய்து காட்டி, விண்வெளி நாயகனாக உயர்ந்து நிற்கிறார். அவரின் சில அரிய போட்டோஸை மேலே கொடுத்துள்ளோம், வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.
News October 15, 2025
விசிக தம்பட்டம் அடிக்கும் கட்சி அல்ல: திருமாவளவன்

தாங்கள் தான் அடுத்த CM, அடுத்து ஆட்சி அமைப்போம் என தம்பட்டம் அடிக்கும் கட்சி விசிக அல்ல என்று திருமாவளவன் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரை பின்பற்றும் கொள்கை கொண்ட கட்சி தான் விசிக என்றும் அவர் குறிப்பிட்டார். விசிக கொள்கையுடன் வலுவாக வளர்கிறது என்பதாலேயே சிலர் சதித் திட்டம் தீட்டி வீழ்த்த நினைப்பதாகவும் தெரிவித்தார்.
News October 15, 2025
புதிய சகாப்தம் படைக்கும் UPI!

UPI பரிவர்த்தனை முறை விரைவில் ஜப்பானிலும் அறிமுகமாகவுள்ளது. அந்நாட்டிலுள்ள லோக்கல் கடைகளிலும் UPI பேமெண்ட்ஸ் முறையை கொண்டுவர, ஜப்பானின் NTT Data-வுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய சுற்றுலா பயணிகள் ஜப்பானிலும் எளிதாக UPI மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். முன்னதாக, கத்தார், பிரான்ஸ், UAE, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலும் UPI உள்ளது குறிப்பிடத்தக்கது.