News October 15, 2025
ராசி பலன்கள் (15.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News October 15, 2025
காங்.,க்கு எதிராக உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

கரூருக்கு வந்த உதயநிதி, உடனடியாக துபாய்க்கு சென்றது ஏன் என திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். காங்., மூத்த நிர்வாகியின் இந்த பேச்சுக்கு, ‘ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, நாவை அடக்கி பேசு’ என உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, ‘திமுக, காங்., ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது’ என வேலுசாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.
News October 15, 2025
மூலிகை: தோல் நோய்களுக்கு குப்பைமேனி போதும்

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤குப்பைமேனி இலையின் சாற்றை வெள்ளை சுண்ணாம்பு கலந்து, சொறி- சிரங்கு பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவலாம் ➤குழந்தைக்கு காது வலி இருக்கும் போது, குப்பைமேனி இலைகளை பேஸ்ட் ஆக்கி வலி உள்ள இடத்தில் பற்றுபோடலாம் ➤சொரி, சிரங்கு ஆகியவற்றின் மீது குப்பைமேனி இலைச்சாற்றை தடவி வந்தால் குணமாகும் ➤குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் புழுக்களை அகற்ற குப்பைமேனி உதவும். SHARE IT.
News October 15, 2025
பிரபல தமிழ் நடிகையின் தந்தை காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷின் தந்தை ரவீந்திரன் (83) உடல்நலக் குறைவால் காலமானார். தலைமை செயலகத்தில் IAS அதிகாரிகளின் தனி செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு சினிமா பிரபலங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்படுகிறது.