News October 14, 2025
சிறப்பு மிக்க கோயில்கள்… PHOTOS

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் தமிழகத்தில் தான் உள்ளன. இங்குள்ள கோயில்களின் கட்டட அமைப்பே அதன் வரலாறை கூறும். பார்ப்பவர்களையும் வியக்க வைக்கும். அதனால் பிற மாநிலங்களின் சிறப்பு மிக்க கோயில்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக வித்தியாசமான கட்டடக் கலை உடைய சில கோயில்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை சுற்றுலாவுக்கும் சிறந்த இடமாகும். மேலே இருக்கும் போட்டோக்களை SWIPE செய்து பாருங்க!
Similar News
News October 15, 2025
VIRAL: ராமர் கோயிலின் முதல் தள புகைப்படங்கள்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்த கோயிலின் முதல் தளத்தின் புகைப்படங்கள் முதல்முதலில் வெளிவந்துள்ளன. இங்கு 5 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வீக அனுபவத்தையும், கட்டிடக்கலை மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது. மேலே Swipe செய்து அதை பாருங்கள்.
News October 15, 2025
இன்னைக்கு ரொம்ப கவனமா இருங்க

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்.15) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையிலும் மிதமான மழை பெய்யுமாம். எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் குடைய எடுக்க மறக்காதீங்க.
News October 15, 2025
தீபாவளி.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

இன்னும் 5 நாள்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் & தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஹாஸ்பிடல்ஸ், வழிபாட்டு தலங்கள் & அமைதியாக இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் <<18005190>>நேரத்தையும்<<>> அரசு அறிவித்துள்ளது.