News October 14, 2025
ராமநாதபுரம்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்;

இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2025 காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாய கோரிக்கைகள் குறித்து பேசலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
கோவை டூ ராமநாதபுரம் சிறப்பு ரயில் ?

தமிழகத்தில் மோட்டார் தயாரிப்பு எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தென் மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் கோவையில் பணி செய்கின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.உங்க ஊருக்கு கோவையிலிருந்து ரயில் வந்தால் USE-ஆ இருக்குமா கமெண்ட் பண்ணுங்க.
News October 15, 2025
ராமநாதபுரம்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
ராமநாதபுரம்: தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி மர்ம மரணம்

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜபுஷ்பம் 73. இவரது கணவர் நடராஜன் 2023ல் உயிரிழந்தார். ராஜபுஷ்பம் மகன் அருண் ராஜாவுடன் ஓம்சக்தி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன் அருண்ராஜா தாய் ராஜபுஷ்பம் வீட்டில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.