News April 16, 2024
திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு எனப் புகார்

திமுகவினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக R.S.பாரதி அளித்த புகாரில், முக்கிய வேட்பாளர்கள் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் பேசுவதை, உளவு செயலிகள் மூலம் ஒட்டுக் கேட்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை மூலம் இந்த ஒட்டுக் கேட்பு நிகழ்வு அரங்கேற்றப்படுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
உக்ரைன் NATO-வில் சேரக்கூடாது: டிரம்ப்

உக்ரைன், NATO-வில் சேரக்கூடாது என்பதற்காகவே ரஷ்யா போரைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் NATO-வில் சேர முடியாது என மத்தியஸ்தம் செய்துவரும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் உக்ரைன் உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி விரும்பினால் போரை உடனடியாக நிறுத்த முடியும் (அ) தொடர முடியும் என்றும் டிரம்ப் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News August 18, 2025
உயராத தங்கம் விலை

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,200-க்கும், கிராமுக்கு ₹9,275-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 18, 2025
அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்

தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும் மறுக்கும் ஓடுவதாகவும், அணில் பத்திரமாக மரத்தில் ஏறி இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார்.