News October 14, 2025

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு

image

தென்காசி மாவட்ட மக்களே வருகின்ற 20/10/2025 தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.

Similar News

News October 15, 2025

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்க தடை

image

தென்காசி, குற்றாலம் ஆய்க்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.மேற்கு தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கபட்டது. இதனால் மக்கள் புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

News October 15, 2025

தென்காசி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 15, 2025

தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபிசில் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!