News October 14, 2025
தனித்துவ விவசாய அடையாள அட்டை பெறுவது எப்படி?

PM கிசான் திட்டத்தின் ₹6,000 உதவித்தொகை பெற விவசாயிகள் ‘தனித்துவ விவசாய அடையாள அட்டை’ வைத்திருப்பது கட்டாயமாகும். இந்த ID அட்டை பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், சமீபத்திய கணினி சிட்டா ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். அப்போது வழங்கப்படும் தனித்துவ அடையாள எண் அடிப்படையிலேயே விவசாய திட்டங்களின் பயன்களை பெற முடியும்.
Similar News
News October 15, 2025
சச்சினின் சாதனை.. Ro-Ko இருவரில் யார் முந்துவார்?

ஆஸி.க்கு எதிராக அதிக சதங்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே(9 சதங்கள்) சேரும். இந்த பட்டியலில் அடுத்த இடத்தில், Ro-Ko இருவரும் 8 சதங்களுடன் உள்ளனர். வரும் 19-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில், இன்னும் ஒரு சதம் அடித்துவிட்டால், சச்சினின் சாதனையை சமன் செய்து விடலாம். ஆனால், Ro-Ko இருவரில் யார் இந்த சாதனையில் முதலில் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News October 15, 2025
BREAKING: இரவில் விஜய் எடுத்த அதிரடி

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து ஆறுதல் கூறி, நேரில் நிதியுதவி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பதற்கான இடத்தை தர, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், இடத்தை தேர்வு செய்தபின், தீபாவளிக்கு பிறகே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 15, 2025
VIRAL: ராமர் கோயிலின் முதல் தள புகைப்படங்கள்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்த கோயிலின் முதல் தளத்தின் புகைப்படங்கள் முதல்முதலில் வெளிவந்துள்ளன. இங்கு 5 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வீக அனுபவத்தையும், கட்டிடக்கலை மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது. மேலே Swipe செய்து அதை பாருங்கள்.