News October 14, 2025
சேலம்: தொடர் வழிப்பறி குற்றவாளி மீது குண்டாஸ்

சேலம்: கிச்சிப்பாளையத்தில் கடந்த செப்.15ஆம் தேதி அருண்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி வழிபறி செய்த வழக்கில் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இதுபோன்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாலும் பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 15, 2025
சேலத்தில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
சேலத்தில் வடமாநில தொழிலாளி விபரீத முடிவு!

சேலம் அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள மர அறுவை மில்லில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சன்னிமண்ஜி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சன்னிமண்ஜி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 15, 2025
சேலத்தில் பைக் மோதி முதியவர் பலி!

சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரைச் சேர்ந்த 65 வயது சண்முகம் என்பவர் சாரதா கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.