News October 14, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்தபோது, <<17996227>>₹2,000 நோட்டுகள்<<>> கிடைத்த செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ₹5,884 கோடி ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை என RBI தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம்.
Similar News
News October 15, 2025
கழுத்து வலி நீங்க இந்த யோகாசனம் பண்ணுங்க!

✦கழுத்து வலி மட்டுமன்றி வயிற்று தொப்பையும் குறைய மார்ஜாரி ஆசனம் செய்யுங்க ➥தரையில் முழங்காலிட்டு, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைக்கவும். முழங்கால்கள் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும் ➥மூச்சை உள் இழுத்து, முதுகை வளைத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தவும். தலையை மேலே உயர்த்தி, மேலே பார்க்கவும் ➥பிறகு, மூச்சை வெளியேற்றி, முதுகை மேல்நோக்கி வளைத்து, வயிற்றை உள்ளிழுத்து, தலை & தோள்களை கீழே இறக்கவும்.
News October 15, 2025
கூகுள் மேப்பில் ஆவணமாகும் தமிழ் பாரம்பரியம்

தமிழகத்தில் உள்ள கலாசார இடங்களை, ‘தகவலாற்றுப்படை’ என்ற பெயரில் கூகுள் மேப்பில் ஆவணமாக்கும் பணியில், தமிழ் இணைய கல்வி கழகம் ஈடுபட்டுள்ளது. அதேபோல் கைவினை பொருள் தயாரிப்பில் சிறப்பு வாய்ந்த கிராமங்கள், கைவினை பொருள்களின் சிறப்பியல்புகளையும் GIS முறையில் பதிவேற்றும் பணி நடந்து வருகின்றன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வழிபாட்டு தளங்கள், விளையாட்டுக்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன.
News October 15, 2025
‘லவ் டுடே 2’ அப்டேட் கொடுத்த பிரதீப்

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைக்கு நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், வருங்காலத்தில் ‘லவ் டுடே 2’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். வரும் 17-ம் தேதி அவர் நடித்த ‘டியூட்’ ரிலீசாகும் நிலையில், டிச.18-ல் ‘LIK’ ரிலீசாகிறது.