News October 14, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News October 15, 2025
திருச்சி: மனைவி கொலை; கணவனுக்கு ஆயுள் தண்டனை

வையம்பட்டி அமையபுரத்தைச் சேர்ந்த விக்டோரியா (21) என்ற பெண்ணை, கடந்த 2018-ம் ஆண்டு குழந்தையில்லாத காரணத்திற்காக கயிற்றால் கழுத்தை நெறித்து கொன்ற வழக்கில், அவரது கணவர் மோசஸ் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குற்றவாளி மோசஸ் ஆரோக்கியராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News October 15, 2025
திருச்சி: பெண் உடல் நசுங்கி பலி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நேற்று நள்ளிரவு திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு ஏசி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த தஞ்சையை சேர்ந்த பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்து நடத்துனர் தலையில் பலத்த காயம் அடைந்து நினைவிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.