News October 14, 2025

முதலீடுகளை ஈர்ப்பதில் ஏமாற்றும் திமுக: அன்புமணி

image

முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை தமிழக அரசு வழங்கி வருவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ₹15,000 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறும் நிலையில், அதனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அதனால் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 15, 2025

தங்கம் விலை ₹3,500 வரை குறையும்

image

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1960 உயர்ந்து ₹94,600-க்கு விற்பனையானது. இந்த விலையுடன் மேக்கிங் சார்ஜ் & GST உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால், ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு பண்டிகை கால சலுகையாக தங்கம் இறக்குமதி வரியை 6%லிருந்து 2%ஆகவும், நகைகளுக்கான GST-ஐ 3%லிருந்து 1.5%ஆக குறைத்தால், சவரனுக்கு ₹3,500 வரை குறையும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 15, 2025

பட்டியலினத்தவர் என்றால் நசுக்கப்படுவீர்கள்: ராகுல்

image

ஹரியானாவில் சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட IPS அதிகாரி புரன் குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது ஒரு குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல என தெரிவித்தார். மேலும், நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக, திறமையானவராக இருந்தாலும், பட்டியலினத்தவராக இருந்தால் நசுக்கப்படுவீர்கள் என்பதை தான் இந்த சம்பவம் காட்டுவதாகவும் சாடியுள்ளார்.

News October 15, 2025

தீபாவளி வரை கனமழை கொட்டி தீர்க்கும்

image

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீபாவளி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!